|                தோழர் சீனிவாசராவ்...
  இந்தப் பெயரைக் கேட்டால் அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட நிலப்பிரபுக்களும்,  ஆதிக்க சக்திகளும், அதிகார வர்க்கமும், அதிர்ந்து போவார்கள். இன்றும்  அவரது நினைவு இச்சக்திகளுக்கு அச்சமூட்டும் ஒன் றாகவே உள்ளது. மறுபுறம்  தஞ்சை மாவட்ட விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும், தலித் மக்க  ளுக்கும் அவரது பெயர்  உத்வேகமும், போர்க்குணமும் ஊட்டுவதாக இருந்தது.  இன்றளவும் அவரது நினைவு கிராமப்புற விவசாய இயக்கத்திற்கும் தலித்  மக்களுக்கும் நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறது.
  காட்டுத்தீயாக பரவிய விவசாய இயக்கம் முதன் முதலில் மன்னார்குடி தாலுகா வில் உள்ள தென்பரை கிராமத்தில்தான்  விவசாயிகள் சங்கம் துவக்கப்பட்டது. இக்கிராமத்தில் விவசாயிகள் சங்கம்  ஆதீனத்தை எதிர்த்து நடத்திய போராட் டம் நிலப்பிரபுக்கள் ஏவிவிட்ட குண்டர்  களின் தாக்குதல், காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள் போன்ற அடக்கு முறைகளை  எதிர்கொண்டு மகத்தான விவசாயிகள், விவசாயத்தொழிலாளர் களின் ஒற்றுமையால்  வெற்றியடைந்தது. அதன் பிறகு தஞ்சை மாவட்டம் முழு வதும் ஏற்பட்ட நிலைமையைப்  பற்றி தோழர் சீனிவாசராவே கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
  “ அன்று முதல் தாழ்த்தப்பட்ட விவ சாயிகளிடமும், பண்ணையாட்களி டமும்,  விவசாயிகள் சங்கம் காட்டுத்தீ போல பற்றிப்பரவ ஆரம்பித்து விட்டது.  சமூகத்துறையிலும், பொருளா தாரத்துறையிலும் தாக்கப்பட்டுக் கிடந்த இந்த  மக்களுக்கு விவசாயிகள் சங்கம் உயிர் காக்கும் தோழனாக ஆகிவிட்டது.  பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுப் பதற்கு இந்த மக்களை, ஜாதி இந்துக்கள்  அனுமதிக்க மாட்டார்கள். அனுமதிக்கா விட்டாலும் போகிறது. சேரிகளிலாவது  கிணறுகள் உண்டா? அதுவும் இல்லை. தொல்லை இத்துடன் நிற்கவில்லை. சாதி  இந்துக்களை தூரத்தில் பார்த்து விட்டாலும் உடனே தரையில் விழுந்து கும்பிட  வேண்டும். இதுதான் அவர் களுக்கு மரியாதை செய்யும் விதம். தம் எஜமானர்களின்  கட்டளைப்படி கீழ்த்தர வேலைகள் அனைத்தையும் இந்த ஆதி திராவிட மக்களே செய்ய  வேண்டும். சாதி இந்துக்கள் ஆதி திராவிட மக்களை எவ்வாறு நடத்துகிறார்கள்  என்பதைப் பற்றி  தென்னிந்திய மக்கள் ஒவ்வொரு வருக்கும் நன்கு  தெரியுமாதலால் நான் அதைப்பற்றி விரிவுபட கூற வேண்டிய அவசியமில்லை.
  “ஆதலால் நசுக்கப்பட்டு சுரண்டப் பட்டு தத்தளித்துக் கொண்டிருந்த இந்த மனித  குலத்துக்கு சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஜோதியாக விளங்கியது விவசாயிகள்  சங்கம். பல்லாயிரக் கணக்கில் விவசாயிகள் சங்கத்தில் அணி திரண்டனர். 1944ல்  15 ஆயிரம் பேர் கலந்து கொண்ட விவசாயிகள் மாநாட் டையும் நடத்தினர்”
  தலித் மக்களின் சமூக உரிமைகளுக்காக சவுக்கடி கொடுப்பது, சாணிப்பால் குடிக்க வைப்பது போன்ற கடும் ஒடுக்கு  முறைகளை அன்றையதினம் மிராசு தார்கள் விவசாயத் தொழிலாளர்களான தலித்  மக்களுக்கு எதிராக ஏவிவிட்டனர். இம்மக்களுக்கு எழுச்சியூட்டுவதிலும்  போராட்டக்களத்தில் இறக்குவதிலும் தோழர் சீனிவாசராவ் தனிக்கவனம்  செலுத்தினார். ‘அடித்தால் திருப்பியடி, உதைத்தால் திருப்பி உதை, திட்டினால்  திருப்பித் திட்டு’ என்பது அன்றையக் கூட்டங்களில் தோழர் சீனிவாசராவின்  முக்கிய முழக்கமாக இருந்தது. இதனால் தலித் உழைப்பாளிகள் மத்தியில் ஏற் பட்ட  ஆவேசத்தையும், எழுச்சியையும் கண்ட ஆதிக்க சக்திகள் கதி கலங்கிப்  போனார்கள். பல கிராமங்களில் ஒப் பந்தங்கள் ஏற்பட்டன. கூலி உயர்வு மட்டு  மல்ல, தலித் மக்களுக்கு எதிரான சமூக ஒடுக்குமுறைகளைக் கைவிடுவ தாகவும்  ஒப்பந்தங்கள் உருவாயின.
  1946லேயே திருத்துறைப்பூண்டி  பெரியநாயகி கோவில் தேரோட்ட விழா வில் தலித்  மக்களுக்கு உரிமை மறுக்கப் பட்டதை எதிர்த்து,  மக்களைத் திரட்டி  சீனிவாசராவ் முன்நின்று நடத்திய போராட்டம் வரலாற்றில் பதிவு செய்யப் பட்ட  ஒன்றாகும். அக்கோவில் கொடி மரத்தில் கொடியேற்றிவிட்டால் 15 நாட் கள் தலித்  மக்கள் திருத்துறைப்பூண்டி ஊருக்குள்ளேயே வரக்கூடாது என அக்காலத்தில்  கட்டுப்பாடு இருந்தது. இது கண்டு ஆத்திரமடைந்த சீனிவாச ராவ் தலித் மக்களின்  கூட்டம் ஒன்றை அவசரமாகக் கூட்டி, கீழ்க்கண்டவாறு முழங்கினார். “தேர்  வரும்போது நடு ரோட்டில் தடுக்க வேண்டும். தாழ்த்தப் பட்ட மக்கள்  தேரோட்டத்தில் பங்கெடுக் கலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண் டும், என்ன  வந்தாலும் சந்திப்போம்”.
  அவரது அறைகூவலை ஏற்று தலித் உழைப்பாளி மக்கள் பெரும் திரளாகக் களம்  இறங்கினர். தேர் புறப்பட்டதும், தலித் மக்கள் உள்ளே புகுந்தனர். ஆதிக்க  சக்திகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வர்கள் இதனைக் கண்டு ஓட்டம் பிடித்தனர்.  தேர் 15 நாட்கள் அங்கேயே நிறுத்தப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்று ஒப்பந்தம் ஏற் பட்டது.  இப்பேச்சுவார்த்தையில் செங் கொடிச் சங்கத்தின் சார்பாக தோழர்கள்  சீனிவாசராவ், பாங்கல் சாமிநாதன், கே.ஆர்.ஞானசம்பந்தம் பங்கேற்றனர். இப்படி  ஏராளமான  ஊர்களில் தலித் மக் களின் உரிமைகளுக்கான போராட்டங் கள் நடைபெற்று  அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.
  அதிகார வர்க்கத்திற்கு எதிராக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கள், தலித் மக்களின் உயர்விற்காகவும்,  உரிமைகளுக்காகவும் போராடியபோது, பல சந்தர்ப்பங்களில் அதிகார வர்க்கமும்,  அமைச்சர்களும் ஆதிக்க சக்திகள் பக்கமே துணை நின்றனர். இவர்களுக்கு  எதிராகவும் தோழர் சீனிவாசராவ் கொள் கைப்பிடிப்போடும் நெஞ்சுரத்தோடும்  போராடினார்.
  விவசாயிகள் இயக்கத்தின் தொடர் போராட்டங்கள் காரணமாக 1946ல் அன் றைய சென்னை  மாகாண அரசாங்கம் நீதிபதி அனந்தநாராயணன் கமிஷனை அமைத்தது. இக்கமிஷன்  குத்தகை விவசாயிகளை மிராசுதார்கள் நிலத்தை விட்டு வெளியேற்றக்கூடாது  என்றும், ஆண்-பெண் விவசாயக்கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனவும்  உத்தரவிட்டது.
  நிலவுடைமையாளர்கள் இந்த உத்த ரவை ரத்து செய்ய நடவடிக்கை மேற் கொண்டனர்.  இதற்கு அன்றைய அமைச் சர் ரங்கபாஷ்யமும் உடந்தையாகச் செயல்பட்டார்.  இப்பிரச்சனை பற்றி விவாதிக்க நீடாமங்கலத்தில் முத்தரப்பு மாநாடு  நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தோழர் சீனிவாசராவ், நீதிபதி அனந்த நாராயணன்  கமிஷன் உத்தரவை அமல் படுத்த வேண்டும என உறுதியான குரலில் வாதாடினார்.  அமைச்சர் ரங்க பாஷ்யத்தை நோக்கி தலையிடுமாறு வலி யுறுத்தினார். இதையொட்டி  அமைச்சர் ரங்கபாஷ்யத்திற்கும் தோழர் சீனிவாச ராவிற்கும் நடைபெற்ற  வாக்குவாதம் வருமாறு :
  சீனிவாசராவ் : ஏஜெண்டுகள் ஏன் இப்படி பிடிவாதம் செய்கிறார்கள். நீங்கள்  தலையிடுங்கள்.
  பாஷ்யம் : நான் வலியுறுத்த முடியாது.
  சீனிவாசராவ் : இதற்கு முத்தரப்பு மாநாடு கூட்டியிருக்க வேண்டிய  அவசியமேயில்லை.
  பாஷ்யம் : மிஸ்டர் பிஎஸ்ஆர், நீங்கள் ஆத்திரத்தை மூட்டும்படி  பேசுகிறீர்கள்.
  சீனிவாசராவ் : நீங்கள்தானே அனைவரையும் வரச் சொன்னீர்கள். நிங்கள் தான்  முடிவு செய்ய வேண்டும்.
  பாஷ்யம் :மிஸ்டர் பிஎஸ்ஆர், நான் யார் தெரியுமா?
  சீனிவாசராவ் : மிஸ்டர் பாஷ்யம், ரெவின்யூ மந்திரி.
  பாஷ்யம் : நான் நினைத்தால் 8 மணி நேரத்தில் போலீஸ் இங்கே குவிந்து விடும்.
  சீனிவாசராவ் : மிஸ்டர் பாஷ்யம், உங்களுக்கு 8 மணி நேரம் வேண்டும். ஆனால்,  நான் புரட்சி ஓங்குக, என்று கோஷம் போட்டால் 5 நிமிடத்தில் நீங்கள் சுற்றி  வளைக்கப்படுவீர்கள். தப்ப முடியாது, ஜாக்கிரதை!
  இவ்வாறு சீனிவாசராவ் ஆவேச மாகக் கூறவும் அதிர்ச்சி அடைந்த பாஷ்யம்  அங்கிருந்து கிளம்பினார்.
  இதன்பிறகு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர் களும் தோழர்  சீனிவாசராவ் மற்றும் தலைவர்களின் மேற்பார்வையில் விவ சாய நிலங்களில் களம்  இறங்கினர். இத னைக் கண்டு திகைப்படைந்த நில வுடைமையாளர்கள் பின்னர் வழிக்கு  வந் தனர். மாவட்ட  ஆட்சித்தலைவர் முன்னி லையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை  யில் ஒப்பந்தம் ஏற்பட்டது.
  செங்கோட்டையாக கீழ்த்தஞ்சை செங்கொடி இயக்கத்தின் தீரமிக்க போராட்டங்களால் தஞ்சை மாவட்ட விவசாயிகள்,  விவசாயத் தொழிலாளர் கள், தலித் மக்கள் தங்களது உரிமை களையும், உயர்வையும்  நிலைநாட்ட முடிந்தது. இப்போராட்டங்கள் பொரு ளாதார உரிமை, சமூக உரிமை என்ற  இரு கூர்முனைகளைக் கொண்டிருந்தன. கீழ்த்தஞ்சை மாவட்டத்தின் பல நூறு  கிராமங்கள் செங்கொடி இயக்கத்தின் கோட்டைகளாக மாறிய வரலாறு இது தான். இதில்  தோழர் சீனிவாசராவிற்கு மிக முக்கியமான பாத்திரம் உண்டு.
  செப்டம்பர் 30 - சீனிவாசராவ் நினைவுதினம் அவரைப் பற்றிய நினைவுகள்  அநீதிகளுக்கு எதிராக நமது உணர்வுகளை தட்டி எழுப்பட்டும். சமூக பொருளாதார  உரிமைகளுக்கான வர்க்கப் போராட்டத்தை வலுவாக முன்னெடுத் துச் செல்ல  இந்நாளில் சூளுரைப்போம்.  | 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக